மாணவிகளுக்கு பாலியல் இம்சை! ஆசிரியர் ஒருவர் கைது.

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தனம் 24.12.21ம் திகதி இடம்பெற்றுள்ளது பாடசாலை சிறுமிகள்மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக முயற்சி தொடர்பில்

சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆசிாயர் அன்றைய தினமே குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் நேற்று 25.12.21 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது

அவரை எதிர்வரும் 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க நீதிமன்று உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் வவுனியா சிறையில் தடுத்துவைப்பதற்காக சிறைச்சாலைகள் பேருந்தில் அழைத்துசெல்லப்பட்டுள்ளார்.