50,000 பேர் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை…

60 வயதுக்கும் மேற்பட்ட சுமார் ஐம்பதாயிரம் பேர் எந்த விதமான கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.இதனை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச்செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றினால் உயிரிழப்போரில் பெரும்பான்மையானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என்பதனால் கட்டாயமாக முதலாம், இரண்டாம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை இந்த வயதுப் பிரிவினர் எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.