புதிய ஆண்டின் தொடக்கத்தில் அமைச்சரவை, அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம்.

புதிய ஆண்டின் தொடக்கத்தில் அமைச்சரவை, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களில் மாற்றம் செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களை திறம்பட செயற்படுத்த தவறிய நிறுவனங்களின் தலைவர்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தலைவர் கோட்டாபய அண்மையில் குறிப்பிட்டார்.

நாட்டில் அரச நிறுவனங்களால் திறம்பட நடத்தப்படும் சுமார் ஐம்பத்திரண்டு நிறுவனங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் சிலர் அமைச்சரை புறக்கணித்து வருவதாகவும் அவர்களுடன் இணைந்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் குழுவொன்று அரச தலைவர் மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.