பிரேசிலில் சுற்றுலா பேருந்து லொரி மீது மோதி விபத்து 5 பேர் பலி,50 பேர் படுகாயம்.

பிரேசிலில் சுற்றுலா பேருந்து லொரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிரேசில் நாட்டின் சவோ பாலொ மாகாணத்தில் இருந்து இன்று அதிகாலை தலைநகர் பிரசிலா நோக்கி இன்று அதிகாலை சுற்றுலா பேருந்தில் 55 பேர் பயணம் செய்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் எதிரே வந்த லொரி மீது மோதி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.