இந்திய போர் விமானம் விழுந்து நொருங்கியது – சம்வ இடத்திலே விமானி பலி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு விழுந்து விபத்துக்கு உள்ளானதில் விமானி உயிரிழந்தார்.

சாம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நஷனல் பார்க் என்ற இடத்தின் அருகே விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு உள்ளூர் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.