பிரதமராக நியமிக்கப்படவுள்ள பசில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம்.

சந்தர்ப்பம் கிடைத்தால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தவிர்க்க முடியாமல் பசில் ராஜபக்சவைபிரதமராக நியமிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ இவ்வாறான கோரிக்கையை முன்வைத்தால் அதனை கோட்டாபய புறக்கணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பசில் ராஜபக்ஷவால் நிதியமைச்சராகவோ அல்லது பிரதமர் பதவியையோ நிறைவேற்ற முடியாது என விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யூடியூப் சனலுக்கு வழங்கிய நேர்காணலில் விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.