ஒமிக்ரோன் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு.

தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டு தற்போது உலகை உலுக்கி வரும் ஒமிக்ரோன் வைரஸ், இந்த ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலும், ஆபிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமிக்ரோன் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்வதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில் தென் னாபிரிக்காவில் இந்த ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு உச்சம் அடைந்து, தற்போது குறையத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை ஒரு நாளில் 27 ஆயிரம் பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது 15 ஆயிரத்து 424 ஆக குறைந்துள்ளது.