19 புகையிரதங்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.இதில் 7 புகையிரதங்கள் பிரதான மார்க்கத்திலும், 6 புகையிரதங்கள் கரையோர மார்க்கத்திலும், 4 புகையிரதங்கள் கள வெளி மார்க்கத்திலும் சேவையில் ஈடுபடவுள்ளன.
இதேவேளை பணிகளுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் கடந்த வாரம் புகையிரத திணைக்களத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு திணைக்களத்தினால் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.ஏனையவர்களுக்கு எஞ்சியுள்ள ஆசனங்களின் அடிப்படையில் அனுமதிச்சீட்டுக்கள் வழங்கப்படும் எனவும் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.