யாழில் அக்காவை காப்பாற்ற முயன்ற தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்…!!

யாழ்ப்பாணத்தில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மனைவியின் தங்கையின் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தென்மராட்சி – கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கணவன் – மனைவி இடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றுள்ளார்.அதனை அடுத்து சகோதரியின் கணவன் தான் வைத்திருந்த கத்தியால் குறித்த பெண்ணை குத்தியுள்ளார்.சம்பவத்தில் 23 வயதான கந்தசாமி சசிகலா என்ற பெண்ணே படுகாயமடைந்துள்ளார்.காயம் அடைந்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.