எண்ணெய்யில் பொறித்த மொறுமொறு அப்பளத்தை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? வாங்க அறிந்து கொள்வோம்

பொதுவாகவே இந்தியர்களின் மதிய சாப்பாட்டில் அப்பளம் கட்டாயமாக இடம்பெறும். சிலர் அப்பளம் இல்லையென்றால் சாப்பிட கூட மாட்டார்கள். இதனை சாம்பார் சாதம், வத்த குழம்பு போன்றவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையே தனி.

அதுவும் சிலர் அப்பளத்தை பாயசத்தில் கலந்து சாப்பிடுவார்கள். இத்தகைய பல சுவைகளை கொடுக்கும் அப்பளத்தில் அதிகளவு ஆபத்தும் உள்ளது.

வீட்டில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பார்க்கலாம்.

  • அப்பளம் ருசியாக இருக்க அதில் சோடியம் உப்பு அதிகளவு சேர்ப்பதுண்டு. இதில் அதிககளவு உப்பு சேர்ப்பதால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகளை உண்டாக்குகிறது.
  • அப்பளத்தை எப்பொழுதாவது சாப்பிடலாம். ஆனால் அடிக்கடி சாப்பிடுவதால் நரம்புகளை வலுவிழக்க செய்கிறது. அப்பளம் சாபிட்டால் ஆண்மை கோளாறு நரம்புத் தளர்ச்சி ஆகியவை உண்டாகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் உண்டாக காரணியாக இருக்கிறது.வயதானவர்கள் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் உணவில் அப்பளத்தை சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது.
  • சிறு வயதிலேயே அதிகமாக அப்பளத்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் பெரியவர்களாகும் போது உப்பு சம்பந்தமான நோய்கள் விரைவில் தாக்கும் என்பதை அவர்கள் நினையில் வைத்து கொள்ள வேண்டும்.
  • அப்பளம் எண்ணெய்யில் பொறிக்கபடுவதால் அதனை அடிக்கடி சாப்பிடுவது மூலம் உடலில் பலவித கொழுப்புகள் சேர்ந்து விடுகிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்க வாய்ப்புண்டு. இதய கோளாறு, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களும் தாக்கலாம்.