விவசாய நிலங்களுக்குள் நுழைந்து மரக்கறிகளை திருடிய குடும்பம்; இலங்கையில் இப்படி ஒரு அவல நிலையா!

வெலிமடை திக்காப்பிட்டிய மற்றும் கஹட்டபிட்டிய விவசாய காணிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திருட சென்றுள்ளனர்.

சந்தையில் காணப்படும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 7 பேரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குடும்பத்தினர் கும்பலாக இணைந்து இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து மரக்கறிகளை திருடி சென்றுள்ளனர்.

சந்தேக நபர்களுக்குள் தாய், தந்தை மற்றும் மகன் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகற்காய், கத்தரிக்காய், தக்காளி மற்றும் பூசணி உட்பட பல மரக்கறிகளை அவர்கள் திருடி செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.