ஒரு செல்பியை வைத்து ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை அறியலாமா? கூகுளின் அதிரடி

ஸ்மார்ட் கைப்பேசிகளில் செல்பி கமெரா தரப்பட்டதிலிருந்து பலரும் செல்பி பிரியர்களாகவே இருக்கின்றனர்.

தமது புகைப்படங்களை செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யவும் தவறுவதில்லை.

இப்படியிருக்கையில் குறித்த செல்பி புகைப்படங்களை வைத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தினை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது கூகுளின் பிக்செல் ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்படவுள்ள இவ் வசதியின் மூலம் இதயத்துடிப்பு வீதம் மற்றும் சுவாச வீதம் என்பவற்றினை கண்காணிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்பி எடுக்கும்போது பயனரின் மார்பு அசையும் வேகத்தை கணிப்பதன் மூலம் இதயத்துடிப்பு மற்றும் சுவாச வீதத்தினை கணிக்கக்கூடிய தொழில்நுட்பத்தினையே கூகுள் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.