இந்தியா – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை பார்வையாளர்கள் இன்றி நடத்த முடிவு.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நேரில் பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றின் தாக்கம் காரணமாக இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் கூடி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு குறித்த தொடருக்கான நுழைவு சீட்டுக்களை வழங்காதிருப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில், மூன்று டெஸ்ட் போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.