33 ஆவது தேசிய விளையாட்டு விழாவில்  யாழ்ப்பாணத்தின் கே.மிதுன்ராஜ் தங்கப்பதக்கம் வென்றார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்படும் 33 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் யாழ்ப்பாணத்தின் கே.மிதுன்ராஜ் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.61 மீற்றர் தூரத்திற்கு குண்டினை எறிந்த நிலையில், அவருக்கு இந்த தக்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் அவருக்கான பதக்கம் இன்று அணிவிக்கப்பட்டதுடன், சான்றிதழும் வழங்கப்பட்டது.