தமது சங்கத்தின் போராட்டம் வெற்றியளித்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

தமது சங்கத்தின் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் இடையே இன்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

இன்று காலை 8மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்குரிய தீர்வு கிடைக்கப்பெறும் வரையில், போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.