கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால் தனியார் துறையில் தொழில் புரியும் 5 லட்சம் பேர் தமது தொழில்களை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக தொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழில் இழப்பு மற்றும் வேறு காரணங்கள் சம்பந்தமாக கொழும்பு நாராஹென்பிட்டியில் உள்ள தொழில் திணைக்களம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களுக்கு ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.சம்பளம் செலுத்தப்படாமை, சம்பளத்தை குறைத்துள்ளமை மற்றும் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.