முச்சக்கர வண்டிகளுக்கான சவாரி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான முதல் கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் சவாரி கட்டணத்தை அதிகரிக்க முச்சகரவண்டி சாரதிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய, முதல் கிலோ மீற்றருக்காக இதுவரையில் அறவிடப்பட்டு வந்த 50 ரூபா என்ற கட்டணத்தை 80 ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.