12 ஆண்டுகளுக்கு பின் சொந்த செலவில் விண்வெளிக்கு சென்ற முதல் நபர்!

விண்வெளிக்கு சுற்றுலா பயணத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த செலவில் விண்வெளிக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையை யுசாகு மெசாவா(Yusaku Maezawa) பெற்றுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான யுசாகு மெசாவா சோயுஸ் (46 வயது) எம்20 என்ற ரஷிய விண்கலம் மூலம் கடந்த 8 ஆம் திகதி விண்வெளிக்கு சுற்றுலா சென்றார்.

யுசாகு மெசாவாவுடன் அவரது உதவியாளர் யோசோ ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் என்ற ரஷ்ய விண்வெளி வீரரும் விண்வெளி சென்றனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 12 நாட்கள் தங்கியிருந்த யுசாகு மெசாவா உள்ளிட்ட 3 பேரும் அதே சோயுஸ் எம்20 விண்கலத்தில் நேற்று முன்தினம் இரவு பூமிக்கு புறப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த விண்கலம் ரஷ்ய நேரப்படி நேற்று காலை 06:16 மணிக்கு கஜகஸ்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள பாலைவன பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது.