இந்த ராசி ஜோடிகள் ஒருபோதும் பிரியமாட்டார்களாம்

சமூகத்தின் தொடக்கமே, திருமண உறவு தான். பல குடும்பங்கள் நிறைந்த சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை குறித்து ஒருவித புரிதலுடன் வாழ்கின்றனர்.

எப்போது ஒரு இளைஞன் அல்லது இளைஞிக்குத் திருமணம் எனும் பந்தத்தில் செல்லும் போது, அவர்களின் பொறுப்பு அதிகரித்துள்ளதாக உணரத் துவங்குவர். அதன் பின்னர் குழந்தைகள் அவர்களின் வளர்ப்பு, தாய், தந்தையாராக அவர்களின் திருமணம் என வாழ்க்கை நகர்ந்து கொண்டே செல்லும்.

இந்த முழு திருமண வாழ்க்கையில் அந்த தம்பதியினரிடையே இருக்கக்கூடிய அன்பும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை தான் வாழ்க்கை எனும் வண்டிக்கு அச்சாரமாகத் திகழும்.

அப்படிப்பட்ட சிறப்பான குடும்பத்தை நடத்தக்கூடிய திருமண தம்பதியர் எப்பேர்ப்பட்ட பிரச்னைகளை சிறப்பாக கையாளக்கூடியவர்களாகவும், எந்த ஒரு சூழலிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல், வாழ்க்கையை துன்பத்திலும் இன்பமாக, மகிழ்ச்சியுடன் நகர்த்திச் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்

அப்படி எந்த ஒரு சூழலிலும் பிரியாமல் இருக்கக்கூடிய ராசி ஜோடிகள் யார் என்பதைப் பார்ப்போம்.

​மேஷம் மற்றும் மீனம்

செவ்வாய் அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் வீரம், ஆற்றல், ஆக்ரோஷம் நிறைந்தவர்களாகவும், அவர்களின் அணுகுமுறை, செயல்பாடு சற்று கடினத்தன்மையுடன் இருக்கும்.

இருப்பினும் மீன ராசியினர் இவர்களின் துணையாக அமைந்திருந்தால் அவர்கள் மென்மையானவராகவும், எதையும் நிதானத்துடன் அணுகக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களின் முரட்டு குணமும், மீனத்தின் மென்மையான குணம் இடையே ஒருவித ஈர்ப்பு தான் இவர்களிடையே இருக்கும் அன்பான உறவின் நங்கூரமாக இருக்கும்.

சிம்மம் மற்றும் துலாம்

அழகு, சுகம், வசதி ஆகியவற்றைத் தரக்கூடிய சுக்கிரன் ஆளக்கூடிய துலாம் ராசியினர் நட்பானவர்கள், அழகானவர்கள் மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்டவர்கள்.

அதுவே சிம்ம ராசியினர் மிகவும் நட்புறவுடன் பழக்கக்கூடியவர்கள். பிரகாசமானவர்களாகவும், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

இந்த ராசி ஜோடி திருமண கூட்டணி மிகவும் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த சூழலிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை வாழ்வார்கள்.

தனுசு மற்றும் மிதுனம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாகவும், சாகசத்தை தேடி அலையக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த இரு ராசி ஜோடியினரிடையே இருக்கக்கூடிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவர்களிடையே பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கும். எந்த ஒரு சிறிய விஷயத்தையும் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். சலிப்பே இல்லாமல் இருவரும் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

ரிஷபம் மற்றும் கன்னி

இந்த இரண்டு ராசி ஜோடிகள் எந்த நேரமும் மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணரக்கூடியவர்கள். இவர்களிடையே இருக்கும் உறவு பெரியது என நினைப்பதால் கடைசி வரை இவர்களின் உறவு நீடிக்கும்.

பிரகாசமான மற்றும் அழகான நேர்த்தியான நபராக இருக்கும் ரிஷப ராசியினர் மற்றும் காதல் மற்றும் ஞானத்தின் ஆளுமையைக் கொண்டிருக்கும் இருவரிடையேயான பொருத்தம் மிக சிறப்பானதாக இருக்கும்.

​மீனம் மற்றும் கடகம்

மீனம் மற்றும் கடக ராசியினர் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். எனவே இது அவர்களிடையேயான உறவு என்றென்றும் நீடிக்கும்.