அவுஸ்திரேலியாவை கதற விட்ட பட்டலர்… கடைசியில் துரதிர்ஷ்டமாக விக்கெட்டை பறிகொடுத்த தருணம் ! வைரலாகும் வீடியோ.

அடிலெய்டில் நடந்த 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஹிட் அவுட்டானது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அடிலெய்டில் நடைபெற்ற 2வத ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அபார வெற்றிப்பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-0 என அவுஸ்திரேலிய முன்னிலையில் உள்ளது. 386 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி, 6 விக்கெட்டுகள் கைப்பற்றினால் அவுஸ்திரேலிய வெற்றி என்ற நிலையில் 5வது மற்றும் கடைசி நாள் போட்டி தொடங்கியது.

இங்கிலாந்து அணி எப்படியாவது 5வது நாள் கடைசி வரை ஆல் அவுட்ட ஆகாமல் தாக்குப்பிடித்து டிரா செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து விக்கெட்டுகளை மளமளவென சாய்த்தனர். எனினும், ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.