எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கோரிக்கை .

இலங்கையில் எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabral) நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் (Basil Rajapaksa) அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் நிதி அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்தும் அந்தக் கடிதத்தில், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலரை பயன்படுத்தினால், அந்நிய செலாவணி இல்லாமல் பெரும் நெருக்கடியை நாடு சந்திக்க நேரிடும்.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலை 35 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலை 24 ரூபாவாலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 11 ரூபாவாலும் உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

எரிபொருள் தேவையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனினும், மத்திய வங்கி ஆளுநரின் இந்தக் கடிதத்திற்கு நிதி அமைச்சர் இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை என தெரியவருகின்றது.