இலங்கைக்கு மேலும் ஒருதொகை பைஃஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கைக்கு மேலும் ஒருதொகை பைஃஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 842,400 என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தினூடாக இன்று(20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 650 ரக விமானத்தில் குறித்த தடுப்பூசி தொகை கொண்டு வரப்பட்டுள்ளதோடு தற்போது அரச மருந்தாக்கல் கூட்டுதானத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.