யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மோதலில் ஈடுபட்டமையால் 5 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.

யாழ்.பல்கலைகழக மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.

திருநெல்வேலி – பால்பண்ணை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருக்கும் பெரும்பான்மையின மாணவர்களே இவ்வாறு மோதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த 5 பேர்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.