வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்.

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 75 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் இரவில் அல்லது மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.