முகமாலையில் மோட்டார் சைக்கிள்-ஹயஸ்-ஆட்டோ விபத்து! 2 பேர் படுகாயம்

முகமாலையில் மோட்டார் சைக்கிளும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளான நிலையில், ஹயஸ் வாகனத்தின் பின்னால் வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் முகமாலை பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த இருவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.