ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

தெமட்டகொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆராமய வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும்போது அவரிடம் 02 கிலோ 25 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெமட்டகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.