சஜித் பிரேமதாஸ அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை மீள ஆரம்பித்ததன் பின்னர், இயலுமானால் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப் பதவிகளை, முன்னர் வகித்தவர்களுக்கே வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்.

முல்கிரிகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்தபோது அவர் இந்த சவாலை விடுத்துள்ளார். திடீரென நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டது.
கோப் மற்றும் கோபா குழுக்களின் விசாரணைகளின் மூலம் பல்வேறு நிதி முறைகேடுகள்குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தக் குழுக்களின் விசாரணைகளை கைவிடாமல், அவற்றின் அறிக்கைகளை இரத்துச் செய்யாமல், அவ்வாறே நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.