சுண்டைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா? வாங்க அறிந்து கொள்வோம்

சுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டது என பலரும் அதை சாப்பிடாமல் ஒதுக்கிவிடுவார்கள். சுண்டை காய்கள் பழங்காலம் முதலே நமது நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்

பசி

ஒரு நாளில் மொன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் பசி உணர்வு ஏற்படுவதே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த அறிகுறியாகும். சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பசி உணர்வு குறைந்து விடும். சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படுத்தும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கு அதிமருந்தாக சுண்டைக்காய் உள்ளது. சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து காலை, மாலை வேளைகளில், இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர பிரச்சினை தீரும்.

எலும்புகள் வலுவாக

அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. சுண்டைக்காய்களை சாப்பிடுவதால் நமது எலும்புகள் உறுதியடையும்.

மூலம்

கடுமையான மலச்சிக்கல் பிரச்சினையே மூலம் நோய்க்கு பிரதான காரணமாக இருக்கிறது. அத்துடன் அதீத உடல் உஷ்ணம் மற்றும் கார உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது. பச்சையான இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

சளித்தொல்லை

சுண்டக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.