கொழும்பு மக்களுக்கு விடுவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

கொழும்பில் இன்று 9 மணிநேர நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

இதன்படி, இன்றிரவு11 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது. நீர் முகாமைத்துவ நடவடிக்கை காரணமாகவே இவ்வாறு நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

அந்த வகையில், கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.