கொடிய கொரோனாவிற்கு இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பலி கொடுத்த ஐரோப்பா.!!

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்துள்ளது. அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 மில்லியனை கடந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் இருநூறு நாடுகளுக்கு மேல் பரவி பல மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.இதனடிப்படையில் குறித்த வைரஸ் காரணமாக நாளாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து மூவாயிரத்து நானூறை கடந்துள்ளது.மேலும், இவ்வைரஸின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 45 லட்சத்து 27 ஆயிரமாக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல நாடுகள் முயற்சி செய்துவரும் நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் நாடளாவிய முடக்கம் என்பன அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு இலக்காகி குணமடைவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது.அதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில், 17 லட்சத்து 5 ஆயிரத்து 678 பேர் குணமடைந்துள்ளனர்.இந்நிலையில், இவ்வைரஸினால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் காணப்படுகின்றது.இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 14 லட்சத்து 57 ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, ஏறக்குறைய 87 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 18 ஆயிரம் பேர்வரையில் இதுவரை குணமடைந்துள்ளனர்.ஐரோப்பாவில் இதுவரையான காலப்பகுதியில் 17 லட்சத்து 18 ஆயிரத்து 673 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 1 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.மேலும், ஆசியாவில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 23 ஆயிரத்து 627 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆசிய நாடுகளில் இதுவரையான காலப்பகுதியில், ஈரானிலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் அங்கு 6854 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.