உங்க முகத்தில் அதிகமாக எண்ணெய் வடியுதா? அப்போ இது உங்களுக்குத்தான்

முகத்தில் முகப்பரு வருவதற்கு காரணமே சருமம் எண்ணெய்ப்பசையாக இருப்பதுதான். அதிகப்படியான எண்ணெய்பசையால் முகத்தில் பருக்களும் அதிகமாககூடும்.

எண்ணெய் பசை முகத்தில் இருக்கும் நுண் துளைகளில் பாதிப்பை உண்டாக்கி முகப்பருக்களை உண்டாக்கிவிடும். இவை முகத்தில் துளைகளை பெரிதாக்கிவிடும்.

கோடைக்காலத்தில் எண்ணெய் முகத்தில் வடியவும் தொடங்கும். முகத்துக்கு பளபளப்பான தோற்றம் தந்தாலும் அவை இறுதியில் முகத்தை சோர்வாகவே வைத்திருக்கும்.

எனவே இவற்றில் இருந்து விடுபட ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • தேன் – 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு நீர்த்தது  அரை டீஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து சிறிய கிண்ணத்தில் கலக்கவும். இதை முகம் முழுக்க குறிப்பாக முகப்பரு இருக்கும் இடத்தில் தடவவும். பிறகு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து சருமத்தை உலர விடவும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்யவும்.
  • கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன், மஞ்சள் – அரை டீஸ்பூன் கற்றாழையை மஞ்சள் நிறம் போகும் வரை நீரில் அலசி விடவும். கற்றாழை ஜெல்லை ப்ளெண்டரில் போட்டு நன்றாக மசிக்கவும். அதனுடன் மஞ்சள் கலந்து நன்றாக பேஸ்ட் ஆக்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். முகத்தை கழுவி உலரவிடவும். வாரத்தில் 3 முறையாவது இதை செய்யவும்.
  • முல்தானி மிட்டி – 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன், முல்தானி மிட்டியை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குழைக்கவும். இதன் நிலைத்தன்மையை சரிசெய்து முகம் முழுவதும் காய்ந்து போகும் வரை வைத்திருந்து முகத்தை கழுவி எடுக்கவும். வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகப்பருவும், எண்ணெய் பசையும் கட்டுப்படும்.முல்தானிமிட்டியுடன் தயிர் கலந்தும் பயன்படுத்தலாம்.
  • தேன் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன், தேன் மற்றும் மஞ்சள் இரண்டையும் நன்றாக கலந்து விடவும். இதை முகத்தில் முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி விடவும். 20 நிமிடங்கள் உலர வைத்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்தில் 3 முறை இதை செய்யவும்.
  • ஓட்ஸ் பொடியாக்கியது – 1 டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் அல்லது பால் – 1 டீஸ்பூன் பாத்திரத்தில் இந்த மூன்றையும் நன்றாக கலந்து விடவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி விடவு. பிறகு 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை இதை செய்யலாம்.
  • தேன் – 1 டீஸ்பூன்,   இலவங்கப்பட்டை – 1 சிட்டிகை, இலவங்கப்பட்டை எண்ணெய் – 1 துளி இரண்டு பொருள்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும். முகப்பரு மற்றும் பருக்களுக்கு ஒரு ஸ்பாட் சிகிச்சையாக இதை பயன்படுத்தலாம். முகம் மற்றும் முகப்பரு இருக்கும் இடத்தில் இதை தடவி 10 நிமிடங்கள் வரை இருக்கட்டும். பிறகு மருக்கள் மறையும் வரை தினசரி ஒரு முறை செய்யவும்.
  • முட்டை வெள்ளையின் கரு – 1, நீர்த்த எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன் , டீ ட்ரீ ஆயில் – 2 சொட்டுகள் அனைத்து பொருள்களையும் நன்றாக கலந்து முகத்தில் மெல்லிய அடுக்கை பயன்படுத்துங்கள். இதை உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். வாரம் இரண்டு முறை இதை செய்து வந்தால் எண்ணெய் பசையும் முகப்பருவும் கட்டுக்குள் வரும்.