இலங்கைக்கான சீனத் தூதர் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து வெளியிட்ட தகவல்

இந்திய மீனவர்களினால் வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளும் என தான் நம்புவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

வடக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கான சீனத் துாதுவர் மன்னார் மாவட்டத்திற்கு நேற்று பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

மன்னார் மாவட்ட நீரியல் வள திணைக்கள அலுவலகத்திற்குச் சென்ற சீன துாதுவர், மீனவர்களுக்கான வலைகள் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களை கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வின் பின்னர் சீன தூதுவரிடம், இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து ஊடகவியலாளர்களினால் கேள்வி தொடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த துாதுவர் வட பகுதி மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையிலான அத்துமீறி மீன்பிடிப் பிரச்சினையினை இந்தியா தீர்த்து வைக்கும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.