யாழ்.நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் இன்றும் தேடுதல்..!கொரோனாவிற்குப் பலியானவர் யாழ்ப்பாணம் வந்தது எப்படி?

கொரோனா வைரஸ் நேற்று முன்தினம் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் வந்துஇ திரும்பவும் பேருந்தில் சென்றுள்ளார். மேலும், அவர் யாழ்ப்பாணத்தில் சில வர்த்தக நிலையங்களுக்கும் சென்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக நாவாந்துனை, ஐந்துசந்திப் பகுதிகளில் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது. நேற்றைய தினம் மேற்படி நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் 14 வரையான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றும் தொடர் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.