முட்டையை வேக வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மையா?

முட்டையில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்திருப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

குறிப்பாக வேக வைத்த முட்டையில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு பல அற்புத பயன்கள் கிடைக்கின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சத்துக்கள்

  •  ஒரு பெரிய முட்டையில் 6 கிராம் உயர்தர புரோட்டின் மற்றும் வைட்டமின் சி தவிர தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
  •  முட்டைகளில் காணப்படும் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள், உடலால் உற்பத்தி செய்ய முடியாத புரதத்தின் கட்டுமானத் தொகுதிகளால் நிறைந்துள்ளன.
  • முட்டையில் உள்ள ஃபோலேட், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் உள்ளிட்டவை குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  • முட்டையில் இருக்கும் வைட்டமின் டி எலும்பு வலிமைக்கு, வைட்டமின் ஏ கண்களுக்கு, வைட்டமின் பி-6 மூளை வளர்ச்சிக்கு, பி12 ரத்த சோகைக்கும் நல்லது.
  • ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடுவது மாரடைப்பு, பக்கவாதம் அல்லது அகால மரணம் ஆகிய அபாயங்களை குறைக்க உதவுகின்றது.

தினமும் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்?

  • கருவிலிருக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் வயது முதிர்வு காலத்தில் நினைவாற்றல் செயல்பாட்டை எளிதாக்கும் கோலின் என்ற சத்து முட்டையில் இருக்கிறது. இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • தினமும் ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறியுள்ளது.
  • முட்டையில் இருக்கும் நிறைவுற்ற மற்றும் நிறைவுறா கொழுப்புகள் இரண்டின் சரியான சமநிலை குழந்தைகளுக்கு சரியான உணவாக அமைகிறது. எனவே வேகவைத்த முட்டைகளை குழந்தைகளுக்கு தாராளமாக வழங்கலாம்.
  • வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிட்டு வரும் தம்பதியினர் மிக விரைவிலே கருத்தரிக்க இயலும்.
  • தினமும் வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் நமது மூளை வேகமாக செயல்படும். படிக்கும் மாணவர்களுக்கு வேக வைத்த முட்டை சாப்பிட கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.