கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டு விபத்து.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மூன்று பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் இன்று மாலை பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள அமுனுவெல்பிட்டியவில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தண்டவாளமும் புகையிரதமும் சேதமடைந்துள்ள போதிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.