இரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு ‘டாட்டா’ சொல்லணுமா? அப்படியானால் தூங்கும் முன் இதைச் உண்ணுங்கள்..!!

தசைப் பிடிப்புக்கள் மற்றும் தசை வலி உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கலாம். பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது அதிக வேலை செய்பவர்கள், நிச்சயம் கடுமையான தசை வலியை தினமும் அனுபவிக்கக்கூடும். தசை வலியால் தூங்குவது என்பது முடியாத ஒன்று. எனவே எப்போது தசைகள் சோர்வடைந்திருந்தாலோ அல்லது அதிகப்படியான வேலை செய்திருந்தாலோ, அந்த தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்ய வேண்டியது அவசியம்.

அதற்கு சிறந்த வழி தசைகளுக்கு மசாஜ் செய்வது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மசாஜ் தவிர, தசை வலி மற்றும் தசைப் பிடிப்புக்களைப் போக்கி, தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்ய வேறு சில இயற்கை வழிகளும் உள்ளன. இக்கட்டுரையில் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் தசை வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சீமைச்சாமந்தி டீயைக் குடிப்பதால், உடலுக்கு ரிலாக்ஸ் கிடைத்த உணர்வு கிடைக்கும். ஏனெனில் இதில் 36 வகையான ப்ளேவோனாய்டுகளுடன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பழங்காலத்தில், தசைப் பிடிப்புக்களுக்கு சிகிச்சை அளிக்க சீமைச்சாமந்தி பயன்படுத்தப்ப்பட்டு வந்தது. வேண்டுமானால் சீமைச்சாமந்தியில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயைக் கொண்டு சோர்வடைந்த தசைகளுக்கு மசாஜ் அளிக்கலாம்.

நரம்புகள் மற்றும் தசைகள் முறையாக செயல்படுவதற்கு மக்னீசியம் மிகவும் தேவை. இந்த சத்து ஒருவரது உடலில் போதுமான அளவில் இல்லாமல் போனால் தான், தசை வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இரவு நேரத்தில் தசை வலி ஏதும் வராமல் இருக்க வேண்டுமானால், வாழைப்பழம், பாதாம், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

நீங்கள் ரிலாக்ஸாக விரும்பினால், தினமும் ஒரு கையளவு ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், ப்ளூபெர்ரியைக் கொண்டு ஸ்மூத்தி தயாரித்துக் குடியுங்கள். ப்ளூபெர்ரி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் குறைப்பதால், உங்கள் தசைகள் வேகமாக குணமடையும்.

நீங்கள் ரிலாக்ஸாக விரும்பினால், தினமும் ஒரு கையளவு ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், ப்ளூபெர்ரியைக் கொண்டு ஸ்மூத்தி தயாரித்துக் குடியுங்கள். ப்ளூபெர்ரி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் குறைப்பதால், உங்கள் தசைகள் வேகமாக குணமடையும்.

உங்கள் தசைகள் மிகவும் பலவீனமாகவும், வலியுடனும் இருப்பது போல் உணர்க்கிறீர்களா? அப்படியானால் ஒரு டம்ளர் செர்ரி ஜூஸ் குடியுங்கள். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், தசைகளில் உள்ள காயங்களால் ஏற்படும் வலியைக் குறைக்கும்.

நம்மில் பெரும்பாலானோர் தசை பிரச்சனைக்கு ஒருபோதும் சிவப்பு மிளகாயை முயற்சி செய்ய துணியவில்லை என்றாலும், இது நாம் சோர்வாக இருக்கும் போது நிச்சயம் வேலை செய்யும். இதில் உள்ள கேப்சைசின், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும் திறன் கொண்டவை. ஆகவே இரவு உணவில் சிவப்பு மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் தசை வலி மற்றும் தசை பிடிப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் டி உடலில் குறைவாக இருந்தாலும், தசை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தினமும் சிறிது நேரம் சூரிய வெயில் படும் இடத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள். அதோடு புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் டி சத்தும் நிறைந்த முட்டைகளை தினமும் சாப்பிடுங்கள். தசைகள் ரிலாக்ஸாக இருக்க இந்த வைட்டமின் மிகவும் தேவை.

தசைகளை ரிலாக்ஸாக்கும் சிறப்பான ஓர் வழி தான் தூக்கம். நல்ல ஓய்வு மற்றும் நிம்மதியான தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டாலே, தசைகள் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். நல்ல ஓய்வை உடலுக்கு கொடுக்கும் போது, மூளை எந்த வேலை செய்யாமல் இருப்பதால், தசைகள் எந்த வேலையுமின்றி அமைதியாக இருக்கும். இதனால் விரைவில் தசைகளில் உள்ள காயங்களும் குணமாகும்.