புலம்பெயர் தேசத்தில் கொடிய கொரோனாவிற்கு பலியான யாழ்ப்பாண இளம் குடும்பஸ்தர்…!! கதறித் துடிக்கும் உறவுகள்..!!

பெல்ஜியம் நாட்டில் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டியைச்சேர்ந்த சுப்பையா பிரதீப்( வயது 40 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் இவர் உயிரிழந்துள்ளார்.இவர் தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்திற்காகவும், அயராது சேவையாற்றிய ஒருவர் என பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.