அந்தரத்தில் பறந்த படி கேட்ச்… ஆஷஸில் ஆஸ்திரேலியாவை மிரள வைத்த பட்லர்!

2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அந்தரத்தில் பறந்த படி கேட்ச் பிடித்து மிரள வைத்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பட்லரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்த முதலாவது அஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அபார வெற்றிப்பெற்றது. அதுமட்டுமின்றி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது.

இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஆஷஸ் டெஸட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 16ம் திகதி தொடங்கியது. கொரோனா தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்ததால் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

கம்மின்ஸிக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது, ஹாரிஸ் மற்றும் வார்னர் ஆகியோர் ஓபனிங்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர்.

7வது ஓவரில் ஸ்டுவர்ட் பிராட் வீசிய இரண்டாவது பந்தை, பேட்டிங் செய்த ஹாரிஸ் பின்பக்கமாக விளாச முயன்றார், ஆனால் பந்து அவரது பேட்டில் பட்டு கீப்பருக்கும் ஸ்லிப்பிற்கும் இடையே சென்றது.