யாழ்.வடமராட்சியில் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்த தேவாலய முகப்பு! இளைஞன் படுகாயம்.

யாழ்.வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி பகுதியில் உள்ள செஸ்த்தியார் தேவாலய முகப்பு பகுதி  இன்றைய தினம் அதிகாலை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தேவாலயத்திற்கு நேற்றய தினம் வருகைதந்திருந்த குடும்பம் ஒன்று அங்கேயே தங்கியிருந்த நிலையில் இன்று வியாழன் அதிகாலை 5.30 மணியளவில்

தேவாலயத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்திருக்கின்றது. இதன்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தசம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.