முகமாலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது, மனித எச்சங்களும் மேலும் சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்று (15) காலை 08 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி​ R. தனுஷனின் மேற்பார்வையின் கீழ் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், விடுதலைப்புலிகளின் சீருடைகளை ஒத்த ஆடைகள், மண்டையோடு, எலும்பு, கால் மற்றும் கை எலும்பு உள்ளிட்ட மனித எச்சங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க அடையாளம் கொண்ட தகடு போன்ற பொருட்களும் குறித்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்திலுள்ள ஏனைய பகுதியில் அகழ்வை மேற்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதியுடன் திகதி பெறப்படவுள்ளது.