வயிற்றை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டுமா? இனி மருந்துகள் வேண்டாம்…. இந்த பானமே போதுமாம்

உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு தான்.இதனை தூய்மையாய் வைத்திருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும். இல்லாவிடின் இது பல உடல் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.இதற்கு இயற்கைமுறையில் ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. இது வயிற்றில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்பு சத்துக்களை சுத்தமாக கரைத்து விடும்.

மேலும் இது முழுக்க முழுக்க இயற்கையான பானம் இதனால் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது என்று கூறப்படுகின்றது.அந்தவகையில் தற்போது இந்த அற்புதபானத்தை எப்படி தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை:இஞ்சி,இலவங்கப்பட்டை,எலுமிச்சை.

செய்முறை:முதலில் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து விடவேண்டும். பின்பு அதில் ஒரு சில துண்டுகள் இஞ்சியை நன்றாக நறுக்கி போட்டு விட வேண்டும்.பின்பு அதில் இரண்டு துண்டுகள் இலவங்கப்பட்டை குச்சியை போட வேண்டும்.

பின்பு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.15 நிமிடம் முடிந்த உடன் அடுப்பை அனைத்து விட்டு சூடு ஆற வைக்கவேண்டும்.நன்றாக சூடு குறைந்த பின்பு அதில் எலுமிச்சையைப் பிழிய வேண்டும் அல்லது ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த எலுமிச்சை ஜூஸ் செய்யும் அதில் சேர்த்து பருகலாம்.