சுரைக்காய் ஜூஸ் அதிகமாக குடிப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குதான்

சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளில் முதன்மையானது. இதனை பலர் ஜூஸ் வடிவிலே எடுத்து கொள்ள விரும்புவார்.

ஏனெனில் சுரைக்காய் ஜூஸில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. சுரைக்காயில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது.

கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், மினெரல்ஸ் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது முதல் எடையைக் குறைப்பது வரை பல வகையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

ஆனால் அதேசமயம் நிறைய பக்க விளைவுகளும் இருக்கின்றன. இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது.

அந்தவகையில் தற்போது சுரைக்காய் ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

  • சுரைக்காய் சாறை அருத்துவது உயிருக்கு ஆபத்தானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சுரைக்காய் சாறு மனித உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • அதிலும், குறிப்பாக சுரைக்காய் கசப்பாக இருக்கும்போது அதன் சாற்றை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
  • சுரைக்காய் சாற்றை உட்கொண்டவர்களுக்கு இரைப்பைக் குழாயிலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், அதற்காக சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும் பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக மருத்துவர் குறிப்பிடுகிறார்.
  • சுரைக்காய் ஜூஸை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு ஏதேனும் அசௌகரியம், குமட்டல், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அசௌகரியம் ஏற்பட்டால் அவரை உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
  • எனவே கசப்பான சுவை கொண்ட சுரைக்காய் சாற்றை உட்கொள்தை தவிர்க்க வேண்டும்.