சுகாதார அமைச்சினால் கட்டுப்பாடுகளுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு!

தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,2021 டிசம்பர் 16 முதல் 31 டிசம்பர் வரை பொது மற்றும் பணி நடவடிக்கைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.