பல வருடங்களுக்கு தன்னுயிரை காப்பாற்றிய சிரேஷ்ட மருத்துவருக்கு தனது சிறப்பான முயற்சியினால் உயிர் காத்து நன்றி பாராட்டிய மருத்துவர்.!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், தற்போது பல்வேறு மனிதாபிமானச் செயல்பாடுகளையும் இந்த வைரஸ் வெளியே கொண்டுவந்திருக்கிறது. பசியால் வாடும் பல உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் செயல்பாடுகளை பலர் முன்னெடுக்கிறார்கள். அவர்களின் வீடு தேடியே உணவுப் பொருட்களைக் கொடுக்கும் பலர் இந்தக் காலத்தில் வெளியே வந்திருக்கிறார்கள்.

இதேபோன்று ஏராளமான செயல்பாடுகளை முன்னெடுக்கும் நிலையில் இன்று பலர் இருக்கிறார்கள். அதுபோன்று, சில நாட்களுக்கு முன்னர் தனது உயிரைக் காப்பாற்றிய சக மருத்துவரின் உயிரை இன்று காப்பாற்றியிருக்கிறார் இன்னொரு மருத்துவர்.இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இரத்தக்குழாய் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டு மரணத்தை நெருங்கிய நிலையில் தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை, இன்று கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றியுள்ளார் இன்னொரு மருத்துவர்.கடந்த 1999ஆம் ஆண்டு, இரத்தக்குழாய் ஒன்றில் திடீரென அடைப்பு ஏற்பட்டு மரணத்தருவாயிலிருந்த ஷாகில் ரஹ்மானுக்கு அதிக கஷ்டம் கொடுக்காமல் சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார் இதய சிகிச்சை நிபுணரான Dr. சந்திரா என்று அழைக்கப்படும் வெங்கடாச்சலம் சந்திரசேகரன்.இந்நிலையில், Dr. சந்திராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட, தற்போது பிரித்தானியாவிலுள்ள அரசு மருத்துவமனையில் தலைமை சுவாசவியல் நிபுணராக பணியாற்றும் ஷாகில் ரஹ்மான், தானே தான் பணி புரியும் மருத்துவமனையில் அவரை அனுமதித்து, தனது சகாக்களுடன் அவருக்கு சிகிச்சையளித்து, கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டுள்ளார்.20 ஆண்டுகளுக்கு முன் தன் உயிரைக் காப்பாற்றிய தனது மூத்த மருத்துவருக்கு, ஏற்ற வேளையில் உதவ முடிந்ததற்காக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் Dr.ஷாகில்.கொரோனா சிகிச்சைக்குப் பின் சுகமடைந்து நல்லபடியாக வீடு திரும்பியதைப் பார்த்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்கிறார் Dr.ஷாகில்.