பதவியை ராஜினாமா செய்வேன்! அமைச்சர் சமல் ராஜபக்ச எச்சரிக்கை.

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதவி விலகாவிட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என அமைச்சர் சமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து இந்த விடயத்தை அமைச்சர் சமல் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது பீ.பி. ஜயசுந்தரவின் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் சமல் ராஜபக்ச மட்டுமன்றி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய சிலரும் பீ.பி.ஜயசுந்தர தொடர்பில் கடுமையான விமர்சனங்களை அரசாங்கத்தின் பிரதானிகளிடம் முன்வைத்துள்ளனர் என அந்த சிங்கள ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.