கோட்டாபய ராஜபக்ஷவின் விவசாயக் கொள்கையை முறியடிக்க சதி.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைபேறான விவசாயக் கொள்கை, திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் (Athuraliye Rathana Thero) கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது குறித்து அரச தலைவர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், ”அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டத்திற்கு முரணான வகையில் பல திட்டங்கள் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே மக்கள் இன்று அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

கட்டம் கட்டமாக செயற்படுத்த வேண்டிய திட்டம் ஒரே தடவையில் அறிமுகப்படுத்தியதன் விளைவையே தற்போது முழு நாடும் எதிர்கொண்டுள்ளது. தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அத்துரலியே ரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.