இலங்கையர்களுக்கு ஆறுதலான செய்தி..கொரோனாவிலிருந்து இன்றும் 32 பேர் குணமடைந்து வெளியேற்றம்..!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 477 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 925 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.