வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்ற பஷில் தலைமையில் விசேட செயலணி!

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்‌ஷ தலைமையில் விசேட செயலணி அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷமன் யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ’30 வருட கால சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்‌ஷக்களுக்கு பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியும். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நாடு வழமை நிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகச் செயற்படுத்தப்படும்.நெருக்கடியான நிலையில் பொதுத்தேர்தலை நடத்த அரசாங்கம் எந்நிலையிலும் குறிப்பிடவில்லை. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தற்போதைய பாரிய சவால்.பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ தலைமையில் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வீத்த்தை 3 சதவீதமாக அதிகரிப்பதே பிரதான எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.