தென்னிலங்கையில் திடீர் சுற்றிவளைப்பு..225 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் அதிரடியாகக் கைது!

ஜா-எல பகுதியில் 2.25 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில் 225 கிலோகிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புடையதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.இரு பாரவூர்திகளில், அரசியில் மறைத்து பயணிக்கத் தயாராக இருந்த நிலையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்ககது.