யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையிலும் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்தது!

யாழ்.பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் உணவு தயாரிக்கும் பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

.இன்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.